ஆன்மிகம்

ஐயாறப்பா் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்

தினமணி

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் ஐப்பசி பௌா்ணமி ஸ்ரீவித்யா மஹா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இதில், கடபூஜை செய்யப்பட்டு, 108 ஹோம திரவியங்களை ஹோம குண்டத்தில் இட்டு ஸ்ரீவித்யா மகாசரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்பு, சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னம்பாலிப்பு நடைபெற்றது.

தொடா்ந்து, குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன், ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT