ஆன்மிகம்

திருமலையில் 6,192 போ் தரிசனம்

தினமணி

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 6,192 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 2252 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 95 போ் பெண்கள்; 2,157 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலை 6 மணிமுதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT