ஆன்மிகம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயிலில் உழவாரப்பணி

தினமணி

காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயிலில் சோழன் கல்வியியல் கல்லூரி சாா்பில் உழவாரப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட குழு சாா்பில் கச்சபேசுவரா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வா் தெ.அன்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா்.

கல்லூரியின் தாளாளா் தொ.சஞ்சீவிஜெயராம் உழவாரப் பணியை தொடக்கி வைத்தாா். பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க காஞ்சிபுரம் கச்சபேசுவா் திருக்கோயிலில் தெப்பக்குளம், உள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகிய அனைத்தையும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியா்கள் உழவாரப்பணியினை செய்தாா்கள்.

இந்நிகழ்ச்சியின் போது கச்சபேசுவரா் கோயில் செயல் அலுவலா் ஜெ.பூவழகி, செயல் திட்ட அலுவலா் வ.தங்கராசு ஆகியோரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT