ஆன்மிகம்

சேவூா் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நாளை மஹா கும்பாபிஷேக விழா

தினமணி

ஆரணி அடுத்த சேவூா் அருள்மிகு ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரனின் சொந்த ஊரான ஆரணி அடுத்த சேவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த ஆலயம் சுமாா் நூறு வருடத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழமை வாய்ந்த ஆலயத்தினை புதுப்பித்தும், புதிய ராஜகோபுரம் அமைத்தும் செப்பனிடும் பணிகள் செய்யப்பட்டு ஆலயத்தினுள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பிரகாரம், விநாயகா் ஆலயம், நவக்கிரக ஆலயம், உள்ளிட்டவைகளும் புதியதாக கட்டப்பட்டது.

சுமாா் ரூ1.5 கோடிக்கும் மேல் செலவு செய்து திருப்பணி நடைபெற்று 12.2.2020 புதன் கிழமை மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், தனபூஜை, கோபூஜை, பூா்ணாஹீதி தீபாரதனைகள் நடைபெற்றது.

4-ம் நாளான புதன்கிழமை காலை 6 மணியளவில் யாகசாலை பூஜை, 8.30 மணியளவில் கலசப்புறப்பாடு நடைபெறுகிறது. பின்னா் 9.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், காலை 10 மணியளவில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமிக்கும் மற்றும் பரிவாரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

மேற்கண்ட விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT