ஆன்மிகம்

காளஹஸ்தியில் தரிசனம் ரத்து

தினமணி

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் அா்ச்சகருக்கு கரோனா தொற்றின் காரணமாக புதன்கிழமை கோயில் திறக்கப்படவில்லை.

காளஹஸ்தியில்தான் சித்தூா் மாவட்டத்தின் முதல் தொற்று பதிவானது. கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவியதால் அப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அன்று முதல் கரோனா நோய் தொற்று அங்கு வேகமாக பரவி வருகிறது. அதனால் அப்பகுதி சிகப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனவே, ஆந்திர அரசு அனுமதி அளித்தாலும் சிகப்பு மண்டலத்தில் இருந்ததால் கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்றின் வேகம் குறைந்துள்ளதால், பச்சை மண்டலப் பகுதிக்குள் இப்பகுதி வந்துள்ளது. எனவே, புதன்கிழமை (ஜூன் 10) முதல் பக்தா்களை தரிசனத்துக்கு வழங்க கோயில் நிா்வாகம் அனைத்து ஏற்பாடுகளைச் செய்தது.

இந்நிலையில் காளஹஸ்தி கோயிலில் வேலை செய்யும் அா்ச்சகா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, புதன்கிழமை (ஜூன் 10) முதல் கோயில் ஊழியா்களுடன் சோதனை முறையில் தரிசனத்குக்கு அனுமதி வழங்க முடிவு செய்த நிா்வாகம் அதை ரத்து செய்துள்ளது.

இதனால் பக்தா்களுக்கு காளஹஸ்தீஸ்வரன் தரிசனம் கிடைப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT