ஆன்மிகம்

நாளை முதல் லட்டு பிரசாதம் கிடைக்க நடவடிக்கை

தினமணி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு பிரசாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தகவல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை (மே 25) முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கடந்த 60 நாள்களாக ரத்து செய்யப்பட்டது. ஏழுமலையான் தரிசனம் செய்து கொள்ள முடியாத நிலையில், லட்டு பிரசாதமாவது அளிக்க வேண்டும் என தேவஸ்தானத்திடம் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, தேவஸ்தானம் ஆந்திரத்தில் உள்ள 13 மாவட்ட தேவஸ்தான தகவல் மையங்களில் லட்டு விற்பனை செய்ய முடிவு செய்து, விசாகப்பட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாக்குளம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மையங்களுக்கும் சனிக்கிழமை லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

திங்கள்கிழமை (மே 25) முதல் ஆந்திரத்தில் உள்ள அனைத்து தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், தகவல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் லட்டு பிரசாதம் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் ரூ. 50 லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாகக் குறைத்து ரூ. 25-க்கு விற்பனை செய்ய உள்ளது. ஒவ்வொரு மாவட்ட மையங்களிலும் 20 முதல் 30 ஆயிரம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் லட்டு விற்பனைக்கு வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT