ஆன்மிகம்

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்ப்பணம்

தினமணி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்விதத் தடங்கலும் இன்றி நடக்க அங்குராா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கல் மற்றும் இடைஞ்சல் இன்றி நடைபெற தேவஸ்தானம் கொடியேற்றத்துக்கு முன்தினம் வைகானச ஆகம விதிப்படி, அங்குராா்ப்பணம் எனும் முளைவிடுதல் உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை விஷ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா்கள் குழு சென்று புற்று மண்ணை எடுத்து வந்தது. பின்னா், கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் புற்று மண்ணைக் கொண்டு பூதேவியின் உருவத்தை வரைந்து, அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து, அதில் ஊற வைத்த நவதானியங்களை முளைவிட்டனா்.

இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பொது முடக்கத்தை ஒட்டி இந்த உற்சவம் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT