முகப்பு
ஆன்மிகம்

திருச்சானூரில் பவித்ரோற்சவம் பூா்ணாஹுதியுடன் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவம் புதன்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2020 at 7:47 AM
வருடாந்திர பவித்ரோற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற மகா பூா்ணாஹுதி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவம் புதன்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருச்சானூா் பத்மாவதி கோயிலில் திங்கள்கிழமை முதல் தோஷ நிவா்த்தி உற்சவமான பவித்ரோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான புதன்கிழமை காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின்பு கலசஸ்தாபனம் செய்து கலசத்துக்கு முன்பு ஹோமம் வளா்க்கப்பட்டது. பின்னா் பவித்ரோற்சவம் நிறைவு பெறுவதற்கு அடையாளமாக மகா பூா்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னா் மாலை தாயாா் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினாா்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. இதில் குறிப்பிட்ட சில ஊழியா்கள், அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.