சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
சிஎஸ்கேவின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் குறித்து...
சிஎஸ்கேவின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் (28 வயது) விளையாடும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்துவதாகக் கூறி வருகிறார்கள்.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐபிஎல் மினி ஏலத்தில் சர்ஃபராஸ் கான் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியினால் வாங்கப்பட்டார். இந்த சீசனில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாகவே பேட்டிங் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுவரை 4 போட்டிகளில் 3 இன்னிங்ஸில் பேட்டிங் கிடைத்துள்ளது. அதில் 99 ரன்களை 202.04 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும்; சராசரி 33ஆக இருக்கிறது.
நேற்றைய போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் அடித்த பந்தை தாவி பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் ஆட்டத்தை மாற்றுவதாக அமைந்தது.
சுரேஷ் ரெய்னாவுக்கும் இவருக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? ஏன் சிஎஸ்கே ரசிகர்கள் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா? சர்ஃபராஸ் கான் களத்துக்கு வந்தாலே ஒரு உற்சாகம் கிடைக்கிறது. அவர் பேட்டிங்கில் இருந்தாலும் சரி ஃபீல்டிங்கில் வந்தாலும் சரி அவரது துருதுருவென்ற குணம் அனைவரையும் கவர்கிறது.
மிடில் ஆர்டரில் அதாரணமானமான பேட்டிங், ஃபீல்டிங்கில் கில்லி, யாராவது விக்கெட் எடுத்தால் முதல் ஆளாகச் சென்று பாராட்டுவது என சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவர் எதைச் செய்தாலும் சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்துவதாக மீம்ஸ்களில் கூறி வருகிறார்கள்.
இன்னும் ரெய்னா போல பந்து மட்டும்தான் வீசவில்லை. அதையும் அடுத்தடுத்த போட்டிகளில் செய்தால் இவரை ”குட்டி ரெய்னா” என்றே அழைப்பதில் தவறில்லை எனச் சொல்லும் அளவுக்கு எல்லாமே பொருத்தமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Sarfaraz Khan Reminds Fans of Suresh Raina! Growing Support Among CSK Fans!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.