FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஎஸ்கேவின் பயிற்சியாளராக விரும்பும் சுரேஷ் ரெய்னா..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பேட்டியால் மகிழ்ந்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து...

4 செப்டம்பர் 2026, 4:14 pm IST
சிஎஸ்கேவின் ஹால் ஆஃப் ஃபேம் விருதை வெல்லும் சுரேஷ் ரெய்னா. - படம்: சிஎஸ்கே
பகிர்:

முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நேர்காணல் ஒன்றில் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் ஆகும் விருப்பம் இருப்பதாகவும் அது குறித்து அணி நிர்வாகத்திடம் பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருக்கின்றன. இதில் சிஎஸ்கே அணி கடைசியாக தோனி தலைமையில் 2023ல் கோப்பை வென்றிருந்தது.

தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி கோப்பை வெல்லாமல் மட்டுமில்லாமல் ஃபிளே ஆஃப் கூட தகுதிபெறாமல் தவித்து வருகிறது. இதனால், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தானாகவே பதவி விலகினார்.

Advertisement

Advertisement

சிஎஸ்கே அணிக்கு யார் பயிற்சியாளராகப் பதவி வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நேர்காணல் ஒன்றி பேசியிருப்பதாவது:

எனக்கு சிஎஸ்கே அணி மிகவும் பிடிக்கும். அந்த அணிக்கு பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். நானும் அவர்களிடம் கேட்டுள்ளேன். ஆனால், இது குறித்து அணி நிர்வாகமே முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சிலர் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கலாம் எனவும் கூறி வருகிறார்கள்.

summary

Suresh Raina has sought the role of CSK coach! Fans are delighted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments