FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நானியின் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடனம்..! பாடல் ரிலீஸ் தேதி!

நடிகர் நானியின் படத்தில் சிறப்பு நடனமாடியிருக்கும் கீர்த்தி சுரேஷ் குறித்து...

தி பாரடைஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் - நானி. - படம்: எக்ஸ் / நானி.
பகிர்:

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் எனும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் நாயகியாக கயாது லோஹர் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி நடித்துள்ளார்கள்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயகிய தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது, இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் நாளை (ஆக.29) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை கசர்லா ஷியாம் எழுத ஜானகி ரெட்டி, பிரபா பாடியுள்ளார்கள்.

இந்தப் படத்தின் டீசர் காட்சிகளில் இடம்பெற்ற மேக்கிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் கூடிய அனிருத்தின் பின்னணி இசைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

summary

Keerthy Suresh to make special appearance with Nani in ‘The Paradise’ song ‘Yeshanagula’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments