மிஷ்கின் தொட்டதால் அசௌகரியத்திற்கு ஆளானேனா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்!
ரசிகரின் பதிவுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி...
திரைப்பட நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷைத் தொட்டு பேசியது வைரலாகி வருகிறது.
இயக்குநர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சத்தியவான் சாவித்திரி திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்குரைஞராகவும் அவருக்கு எதிராக வாதிடும் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.
இதன் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷைப் பாராட்டும் போது அவரைத் தொட்டபடியே பேசினார். இதனைக் கண்ட ரசிகர்கள் மிஷ்கின் தவறுதலாகத் தொடுகிறார் எனச் சாடினர். ஆனால், அது எதார்த்தமாக செய்ததுதான் இதற்கு ஏன் இப்படி தாக்க வேண்டும் என சிலர் ஆதரவாகவும் பதிவிட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரசிகர் ஒருவர், “ஒரு ஆண் மென்மையாகத் தொட்டதற்கே கீர்த்தி சுரேஷ் ஏன் இவ்வளவு அசௌகரியப்பட வேண்டும்? திரைப்படங்களில் இப்படியெல்லாம் நடக்கும் போது அமைதியாகத்தான் இருக்கின்றனர். கீர்த்தியின் முகத்தைப் பாருங்கள், ரொம்பவும் விசித்திரமாகிவிட்டது” என்றார்.
இக்கருத்தைப் பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், “முதலில் என் முகத்தில் எங்கே அசௌகரியத்தைக் கண்டீர்கள்? எங்களுக்குள் அப்பா - மகள் போன்ற உறவு இருப்பதாக அவரும் நானும் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, திரைப்படங்களில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டால் பொதுவெளியிலும் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமா? சகோதரரே, நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.” எனக் கூறியுள்ளார்.
கீர்த்தியின் இப்பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
A video of director Mysskin touching actress Keerthy Suresh while speaking at a film event is going viral.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.