இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் - கீர்த்தி ஷெட்டியின் நடன விடியோ!
நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் முதல் பாடல் குறித்து...

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள புதிய தெலுங்குப் படத்தின் முதல் பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனர் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் ‘ஜனவரி 12 விடுடாலா’ (ஜனவரி 12 அன்று வருகிறோம்) என ரிலீஸ் தேதியை படத்தலைப்பாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் வெங்கடேஷ், நந்தமுரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
சங்கராத்தி விழாவை முன்னிட்டு இந்தப் படம் ஜன.12ஆம் தேதி வெளியாகிறது. பாவா பம்மார்தி சௌஜன்யம்தோ எனும் டேக் லைனுடன் உருவாகியுள்ளது. குடும்ப கதைக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இருந்து நேற்று (நவ.21) ’திவிகி திவிகி’ என்றமுதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் அனந்த் ஸ்ரீராம் எழுத்தில் மது பிரியா - ஹரி பிரியா குரலில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடலுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி பாரம்பரிய உடையில் நடனத்தில் அசத்தியுள்ளார்கள்.
முன்னதாக அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான வெளியான மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் பொங்கலை முன்னிட்டு இந்தப் படமும் உருவாகியுள்ளது தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.