FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 9:46 pm IST
சாய் சுதர்சன், சர்ஃபராஸ் கான் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் விலகினர். அதன் பின், காயம் காரணமாக சாய் சுதர்சனும் விலகினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக அணியில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃபராஸ் கான்.

summary

Sarfaraz Khan has been added to the squad as a replacement for Sai Sudharsan, who withdrew from the Test series against Sri Lanka due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments