வெற்றிக்குக் காத்திருக்கும் நட்சத்திரங்கள்!
தீபாவளி வெளியீடுகளில் பிரபல நடிகைகள்...
நடிகைகள் நயன்தாரா, சாய் பல்லவி, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் தீபாவளி திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாக நவ. 5 ஆம் தேதி ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணாவின் முதல் பாகம் திரைக்கு வருகிறது. நமித் மல்ஹோத்ரா இயக்கிய இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யஷ்ஷும் சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலக அளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகிறது.
அதே போல், தமிழில் உருவான நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதே நாளில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படமும் வெளியாகிறது.
Advertisement
Advertisement
இந்த மூன்று திரைப்படங்களும் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருவதால் இதில் நடித்த நாயகிகளும் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். முக்கியமாக, ஹிந்திக்கு சென்ற சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே இவர் சீதையாகப் பொருந்தவில்லை என நிறைய விமர்சனங்களைச் சந்தித்தார். இவற்றைக் களைந்து பாலிவுட்டில் நிலைக்க சாய் பல்லவி ராமாயணா வெற்றியை எதிர்நோக்கியிருக்கிறார்.
நடிகை நஸ்ரியா சீன் திரைப்படம் மூலம் 12 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் வெற்றியால் தமிழில் அவருக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.
மேலும், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் சரியான வெற்றியைப் பெறாமல் இருப்பதால் அவருக்கும் மூக்குத்தி அம்மன் - 2 வெற்றி முக்கியமாக இருக்கிறது. யார், யாருக்கு இந்த தீபாவளி வெற்றி வாய்ப்பைக் கொடுக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்!