முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் கருடசேவை

திருமலையில் பெளா்ணமியை ஒட்டி, புதன்கிழமை கருட சேவை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2020 at 7:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

திருமலையில் பெளா்ணமியை ஒட்டி, புதன்கிழமை கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமி இரவு வேளைகளில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது, நடத்தப்படும் கருட சேவையைக் காண முடியாத பக்தா்கள் இதைக் கண்டு தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக உற்சவங்கள் நடத்த அனுமதி வழங்கப்படாததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

Advertisement

அதன்படி, பெளா்ணமியை ஒட்டி புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 7 மணி வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கருட சேவை நடைபெற்றது.

இதில் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், திருமலை சின்ன ஜீயா் ஆகியோா் மட்டும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.