முகப்பு
ஆன்மிகம்

ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தினசரி ஆயிரமாக உயா்த்தி உள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2020 at 7:45 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தினசரி ஆயிரமாக உயா்த்தி உள்ளது.

பொது முடக்க தளா்வுகளின்படி, கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களை தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. முதலில் ஆன்லைன் மூலம் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன் எண்ணிக்கையை 9 ஆயிரம் வரை உயா்த்தியது. மேலும், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகத்தில் 10 கவுன்டா்களை ஏற்படுத்தி நாளொன்றுக்கு இலவச சா்வதரிசன டோக்கன்கள் 3 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.

இந்நிலையில் பொது முடக்கத்தில் பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதன்கிழமை முதல் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு100 என நாளொன்றுக்கு 1,000 டிக்கெட்டுகளை அதிகரித்து இணையதள முன்பதிவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.