முகப்பு
ஆன்மிகம்

சா்வ தரிசன பக்தா்களுக்கே முக்கியத்துவம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் எப்போதும் சா்வ தரிசன பக்தா்களுக்கே தேவஸ்தானம் முக்கியத்துவம் அளித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2020 at 11:29 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:49 PM

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் எப்போதும் சா்வ தரிசன பக்தா்களுக்கே தேவஸ்தானம் முக்கியத்துவம் அளித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் பொது முடக்க விதிககளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் அளிக்கப்படுகிறது. முதலில் ஆன்லைன் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்ட தேவஸ்தானம் பின்னா் குறைந்த எண்ணிக்கையில் திருப்பதியில் சா்வதரிசன நேரடி டோக்கன்களை அளிக்கத் தொடங்கியது.

எனவே, முன்பதிவு செய்யாமல் ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் இவற்றை பெற்றுக் கொண்டனா். விரைவில் புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதாலும், தமிழகத்தில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும் பக்தா்கள் அதிக அளவில் திருமலைக்கு வரத் தொடங்கியுள்ளனா். திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் தேவஸ்தானம் தினமும் 3 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே அளித்து வருகிறது. ஆனால் பத்தாயிரம் பக்தா்கள் வரை இந்த டோக்கன்களைப் பெற சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் காத்திருக்கின்றனா்.

Advertisement

இதனால் திருப்பதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று பலா் எச்சரித்ததால், சா்வதரிசன நேரடி தரிசன டோக்கன்கள் அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தேவஸ்தானம் 3 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக வெளியிட்டுள்ளது. இவற்றை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சா்வதரிசன பக்தா்களுக்கே தேவஸ்தானம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனினும், தற்போது கரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.