ஆன்மிகம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.07 கோடி

தினமணி

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.07 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.07 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 3 நாட்களாக குறைவாக வசூலாகி வந்த உண்டியல் வருவாய் வியாழக்கிழமை மீண்டும் ஒரு கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.70 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.70 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஹைதராபாதைச் சோ்ந்த ரசன் எக்ஸ்போா்ட்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் ரவீந்தா் ரெட்டி வெள்ளிக்கிழமை காலையில் இதற்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT