கட்டுரைகள்

நெற்றியில் சமயசின்னம் வைப்பது அவசியமா?

பூஜையின் போது நம் நெற்றியில் வைக்கும் திருநீர், சந்தனம், குங்குமம், திருமண்

ச.பாலகிருஷ்ணன்

சமயசின்னம் என்றால் என்ன ? 

கோவில்களில் அல்லது வீடுகளில் பூஜையின் போது நம் நெற்றியில் வைக்கும் திருநீர், சந்தனம், குங்குமம், திருமண் போன்றவற்றை சமயச்சின்னம் என்று பொதுவாக சொல்வதுண்டு. சமயசின்னம் அணிவது எதற்காக? அப்படி அணிவதால் நாம் அடையும் பலன்கள் என்னென்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், மனித உடலைப் பற்றி சிறிது காண்போம். 

ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், தூக்கம், கனவு, நினைவு, கோபம், தியானம், ஓட்டம் போன்ற அனைத்து விதமான உணர்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைவது அவன் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றமே (chemical reaction or hormone secretion) என விஞ்ஞானம் கூறுகின்றது. அதாவது ஒரு குறிப்பிட்ட உணர்வுக்கோ அல்லது செயலுக்கோ சில குறிப்பிடும் படியான வேதியியல் பொருட்கள் (hormones) ரத்தத்தில் கலந்து ஏற்படுத்தும் மாற்றமே காரணம் என்கின்றது விஞ்ஞானம். இந்த வேதியியல் பொருட்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு ரத்தத்தில் கலப்பதற்கு நாளமில்லா சுரப்பிகள் (endocrine glands) பயன்படுகின்றது. 

நம் உடலில் கண்ணிற்கே தெரியாத எண்ணற்ற சுரப்பிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நிர்வகிப்பது 7 வகையான முக்கியமான சுரப்பிகளாகும். இவைகளை அன்றைய காலத்தில் விளக்கிச் சொல்லவும், விளங்கி கொள்ளவும் முடியாத காரணத்தினால் சித்தர்கள் இவைகளை சக்கரங்கள் என பெயரிட்டனர்.

1. மூலாதாரம்- டெஸ்டிஸ் அல்லது ஓவரி 
2. சுவாதிஸ்தானம்- அட்ரினல் சுரப்பி
3. மணிபூரகம்- கணைய சுரப்பி
4. அனாகதம்- தைமஸ் சுரப்பி
5. விசுத்தி- தைராய்டு சுரப்பி
6. ஆக்கினை- ஹைப்போ தலாமஸ் & பிட்யூட்ரி சுரப்பி
7. சகஸ்தாரம்- பினியல் சுரப்பி

என சக்கரங்களாக மெய்ஞானத்திலும் சுரப்பிகளாக விஞ்ஞானத்திலும் விளக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து சுரப்பிகளின் செயல்பாடுகளை முழுவதுமாக கட்டுபடுத்துவது பிட்யூட்ரி சுரப்பியாகும். இந்த பிட்யூட்ரி சுரப்பியை முழுவதுமாக கட்டுபடுத்துவது ஹைப்போதலாமஸாகும். இந்த ஆறு சுரப்பிகள் வரைதான் விஞ்ஞானத்தால் ஓரறவு விளக்க முடிந்ததே தவிர, ஏழாவதான பினியல் சுரப்பியை பற்றி விஞ்ஞானத்தால் சிறிதளவு கூட விளங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் இதற்கு மெய்ஞானம் என்றோ விடை தந்துவிட்டது.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விந்து (சுக்கிலம்), நாதம் (சுரோணிதம்) என்று எதுவும் தனித்தனியாக கிடையாது. மேலும் இதில் மூன்றாவதாக தேவநீர் என்ற ஒன்றும் இயற்கையாக இருவருக்குமே உள்ளது. இதில் என்ன வேறுபாடு உள்ளது என்றால்? ஆணிற்கு சுக்கிலம், சுரோணிதம், தேவநீர் என்ற மூன்றும் ஒன்றாக உள்ளன. பெண்ணிற்கு இவைகள் அனைத்தும் தனித்தனியாக உள்ளன மற்றும் பெண்ணிற்கு கருப்பையும் ஒரு எலும்பும் கூடுதலாக உள்ளன. இதை பற்றி வடகறை சிவானந்த பரமஹம்சரால் ‘சித்தவேதம்’ என்ற நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தர்கள் வழியில் ரசமணி கட்டுவது என்ற ஒருமுறை உண்டு. பாதரச திரவத்தை சுத்திசெய்து ஒரு மணியாக கட்டி உடலில் அணிந்து கொள்வர். இதனால் அவர்கள் சகல நன்மைகளும் அடைய முடியும். ஆனால் தன் உடலை கொண்டு தனக்குள்ளேயே ரசமணி கட்டும் முறை ஒன்றும் சித்தர்களிடம் உண்டு. நம் உடலில் பாதரச அணுக்கள் அதிகமாக உள்ள ஒரே தாதுப் பொருள் நம் விந்து மட்டும்தான்.  இதைப்பற்றி வள்ளலார் ‘சுக்கில மேலேற்றல்’ என்ற தலைப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதாவது திரவநிலையில் உள்ள விந்துவை சுத்த உஷ்ணத்தை கொண்டு சுத்திசெய்து போகாபுனலாக மாற்றி ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொரு விகிதத்தில் மணியாக கட்டுவதே சிறந்த முறை ஆகும். இதில் அதிகப்படியான விகிதத்தில் கட்டப்படுவது நம் தலையில் ஆகும். இதுவே நாளடைவில் நாதத்துடன் கலந்து நம் கண்ணிற்கு முன் ஒளிப் புள்ளியாக திகழும்.  எப்படி சுக்கிலத்தில் பாதரசம் அதிகமாக உள்ளதோ, அதேபோல் சுரோணிதத்தில் கந்தகம் அதிகமாக உள்ளது.

சரி இதுவரை கூறிய விளக்கத்திற்கும் சமயசின்னம் அணிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம்!

அதற்கான பதில்....

முதலில் திருநீறு மற்றும் குங்குமம் பற்றி பார்ப்போம்..

எந்தவித செயற்கை ரசாயனமும் இல்லாமல் பசுவின் சாணத்தை கொண்டு இயற்கையான முறையில் செய்யப்படும் திருநீறில் பாதரச மூலக்கூறுகள் அதிகமாக உள்ளன.  அதேபோல் பச்சரிசி மற்றும் மஞ்சள் கொண்டு செய்யப்படும் குங்குமத்தில் கந்தக மூலக்கூறுகள் அதிகமாக உள்ளன. அக்காலத்தில் வீட்டிற்கு வெளியே பசுவின் சாணத்தால் மெழுகி பச்சரிசியால் கோலமிட்டு நடுவில் மஞ்சளை பிடித்து வைத்ததிற்கு காரணம் இதுவே ஆகும்.
பசுவின் சாணத்தில் எப்படி பாதரச மூலக்கூறுகள் அதிகமாக நிறைந்துள்ளதோ, அதேபோல் மஞ்சளில் அதிகபடியான தேவநீரும், பச்சரிசியில் அதிகமாக கந்தகமும் நிறைந்துள்ளது. மேலும் அக்காலத்தில் சாணத்தால் மெழுவது, பச்சரிசி கொண்டு கோலமிடுவது சமைப்பது, மஞ்சளை கொண்டு சுத்தம் செய்வது போன்ற சடங்குகள் கூட இந்த மூலக்கூறுகள் நம்மை சுற்றிலும் எப்பொழுதும் இயற்கையாகவே நிறைந்திருக்க வேண்டும் என்ற காரணம்தான். இப்படி செய்வதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாவது மட்டும் இல்லாமல் மேற்பட்ட மூலக்கூறுகள் சுவாசத்தின் வழியாகவும் உடலில் சேர்க்கப்படுகின்றது.

ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூடரி சுரப்பிதான் உடல், மனம் என அனைத்து இயக்கத்திற்கும் காரணம் என்பதை இதற்குமுன் பார்த்தோம். பினியல் சுரப்பியையும் சேர்த்து இந்த மூன்று சுரப்பிகளும் நாம் திருநீறு வைக்கும் புருவமத்திக்கு நேர் உள்ளே அமைந்துள்ளன. அப்படி வைக்கப்படும் திருநீறு மற்றும் குங்குமத்தின் மூலக்கூறுகள் புருவமத்தி வழியாக உள்வாங்கபடுகின்றது. மேலும் திருநீறுக்கு இயற்கையாகவே நீரை உருஞ்சும் தன்மை உள்ளதால் தலையில் சேரும் தேவையற்ற நீரை வெளியே எடுத்துவிடும். அதுபோல் குங்குமம் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். இத்திருநீறும் குங்குமமும் இயற்கையாகவே தூய்மையான நல்ல அதிர்வலைகளை மட்டும் உள்வாங்கும் தன்மை கொண்டது என்பதால் மனம் அமைதியாக செயல்பட உதவுகின்றது. மற்றவர்களின் எண்ண அலைக்குள் சிக்கிகொள்ளாமல் தடுக்கின்றது.

குறிப்பு :

தற்போது பயன்படுத்தப்படும் செயற்கை விபூதி மற்றும் குங்குமத்தால் மேற்குரிய நன்மைகள் பெருவது அரிது, மாறாக சரும கோளாறு தான் வரும்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்திற்கே மேற்குரிய பலன்கள் பொருந்தும்.

நோயற்ற வாழ்வுக்கு நெற்றியில் சமயசின்னம் அணிவது நல்லது.

‘நீரு இல்லா நெற்றி பாழ்’  என்பது உண்மைதான் அல்லவா?

- ச. பாலகிருஷ்ணன், கோயம்பத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT