முகப்பு
செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், தங்க ஒட்டியாணத்தை சென்னையைச் சேர்ந்த பக்தர் வழங்கினார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், தங்க ஒட்டியாணத்தை சென்னையைச் சேர்ந்த பக்தர் வழங்கினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

நிறைவு நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது.

இதையொட்டி, சென்னையைச் சேர்ந்த பக்தர் காயத்திரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் நடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியாணமும் செய்து, கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.

இதன் மதிப்பு ரூ. 25 லட்சமாகும். நடராஜருக்கு தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியாணமும் சிறப்பு ஆராதனைக்குப் பிறகு பொதுதீட்சிதர்களால் திங்கள்கிழமை பொருத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →