செய்திகள்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் செப்.7 ல் தேரோட்டம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

தினமணி

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

இத் திருக்கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை  முன்னிட்டு,  திங்கள்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு கோஷ்டி, 9 மணிக்கு கொடிமரத்துக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து கொடியேற்றமும் தீபாராதனையும்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோயில் ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை சடகோபன் சுவாமிகள், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி,ஊராட்சி முன்னாள்  தலைவர்கள் முருகேசன், பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருவிழா நாள்களில் தினமும் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் பல்லக்கில் மாடவீதி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ஆம் திருவிழாவை முன்னிட்டு செப். 2ஆம் தேதி இரவில் கருட வாகனத்தில் சுவாமி வைத்தமாநிதி பெருமாளும், அன்னவாகனத்தில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளும் கருடசேவை  நடைபெறுகிறது.

9ஆம் திருவிழாவை முன்னிட்டு, செப். 6ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி ஸ்ரீ மதுரகவி ஆழ்வார், சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் வீதி உலா நடக்கிறது.   10ஆம் திருவிழாவை முன்னிட்டு, செப். 7ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT