செய்திகள்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

DIN

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோயில், வைகுண்டப் பெருமாள் வகையறா கோயில்கள் உள்ளன. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டன. பின்னர், விஜயநகரப் பேரரசு காலத்தில் மகா மண்டபமும், சபா மண்டபமும் கட்டப்பட்டன.
இக்கோயிலில் கடைசியாக கடந்த 2001-ஆம் ஆண்டு, ஜூன் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது சுமார் ரூ.1.41 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) காலை 7.32 மணிக்கு மேல் 9.21 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மனுக்கு 33 குண்டங்கள் கொண்ட யாகசாலைகள், பரிவார சந்நிதிகளுக்கு தனி யாகசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் காலை 11 மணி அளவில், சுவாமி தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக காவல்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான வசதிகளை செய்துள்ளனர். முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜைகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ந.திருமகள், எம்எல்ஏ பழனி, முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன், பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், செயல் அலுவலர் இரா.வான்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT