செய்திகள்

அரக்கோணத்தில் சீனிவாச திருக்கல்யாணம்

DIN

அரக்கோணம் பஜார் பகுதி திருப்பதி-திருமலை பாத யாத்திரை குழுவினரின் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணம் பஜார் பகுதி ஆன்மிக பக்தர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து வருடந்தோறும் புரட்டாசி மாதம் அரக்கோணத்தில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை புறப்படுகிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத
சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சீனிவாச பெருமாள் அலங்கார ரூபமாய் திருமண பந்தலுக்கு புறப்படும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எதிர்கொண்டு சீனிவாச பெருமாளை அழைக்கும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பூக்கடை என்.அரிகிருஷ்ணன் தலைமையில் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT