செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு: திருத்தணி முருகன் கோயிலில் 1,008 பால்குட அபிஷேகம்

DIN

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதில், அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெரு, நந்தியாற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் 1,008 பால்குடங்களுக்கு மஞ்சள் பூசி, வாழை இலை வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதில், எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர் பங்கேற்று, பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, பெரிய தெரு, கீழ்பஜார், ஜோதிசுவாமி கோயில் தெரு, கந்தசாமி தெரு, ம.பொ.சி சாலை, சரவணப்பொய்கை வழியாக பால்குட ஊர்வலம் திருத்தணி மலைக் கோயிலை அடைந்தது.
பின்னர், காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 1,008 பால்குடங்கள் மூலம் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கேபிள் எம்.சுரேஷ் உள்பட
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT