செய்திகள்

சபரிமலையில் மகர ஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தினமணி

சபரிமலையில் சனிக்கிழமை மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகரஜோதி தரிசனத்துக்காக பெருவழிப்பாதை, பம்பை பிரதான நடைபாதை, வண்டிப்பெரியாறு உப்புப்பாறை ஆகிய 3 வழிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முன்னதாக, பந்தளத்தில் இருந்து திருவாபரணங்கள் சனிக்கிழமை மாலை சபரிமலை வந்தடைந்தன. மாலை 6.30-க்கு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, சன்னிதானத்தில் தீபாராதனை நடைபெற்றதும், பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகரஜோதி தெரிந்தது. இதனை, அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சபரி பீடத்தில் இருந்து 3 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறக்கப்பட்டதும் சன்னிதானத்தை அடைந்து தரிசனம் செய்தனர்.
ஜனவரி 18 வரை நெய்அபிஷேகம் நடைபெறும். பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கவும், பிரசாத அரவணை, அப்பம் தேவையான அளவு வழங்கவும் கூடுதல் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT