செய்திகள்

தஞ்சை பெரியகோயில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனிகளால் அலங்காரம்

DIN

மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சுமார் 750 கிலோ எடையுள்ள காய்கனிகள், இனிப்பு வகைகளால் ஞாயிற்றுக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேசுவரருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், செüசெü, முள்ளங்கி நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செம்பருத்தி, செண்டி போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 750 கிலோ. பின்னர், சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மகா நந்திகேசுவரர் முன்பு 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள், பட்டுத் துணி அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT