செய்திகள்

திருவேட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

தினமணி

திருத்தணியை அடுத்த அகூரில் உள்ள திருவேட்டீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில் கற்பகாம்பாள் சமேத திருவேட்டீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, கற்பக விநாயகர், பாலமுருகர், தட்சணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், துர்க்கையம்மன், பைரவர், ஐயப்பன், நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டன.
இங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 17-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 101 கலசங்கள் வைத்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோயில் விமானம், விக்கிரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில், திருத்தணி, அகூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT