செய்திகள்

உத்தரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

DIN

உத்தரமேரூர் ஆனந்தவள்ளி சமேத சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
உத்தரமேரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி நாயிகா சமேத சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை, மாலை வேலைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சுந்தர வரதராஜப் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக கருட சேவை உற்சவம் 7-ஆம் தேதியும் 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டமும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உபய நாச்சியார்களுடன் சுந்தரவரதராஜப் பெருமாள் திருத்தேரில் அமர்ந்து மாடவீதிகளில் பவனி வந்தார். தேரடி வீதியில் தொடங்கி கருணீகர் தெரு, திருமலை பிள்ளைத் தெரு, சந்நிதித் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். இதையொட்டி வழிநெடுக பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் உத்தரமேரூர் போலீஸார் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT