செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 243.69 கோடி

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மகரவிளக்குத் திருவிழாவின்போது சுமார் ரூ. 243.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக, கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மாநில சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2016-17 மகரவிளக்குத் திருவிழாவின்போது கிடைத்த மொத்த வருவாய் சுமார் ரூ. 243.69 கோடி ஆகும். இதில், உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 89.70 கோடி. அப்பம் விற்பனை மூலம் ரூ. 17.29 கோடி கிடைத்துள்ளது.
குருவாயூர் கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு: குருவாயூர் கோயிலின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ. 46.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் கடகம்பள்ளி சுரேந்திரன்.
ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மகரவிளக்குத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT