செய்திகள்

பாட்டைசாரதி அம்மன் திருவிழா

DIN

ஆம்பூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழாவானது செவ்வாய்க்கிழமை கூழ்வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதையடுத்து அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அன்ன தானமும் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
விழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேள வாத்தியங்கள் முழங்க, தாரை தப்பட்டை, நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வடிக்கையுடன் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. காலை 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், மாலையில் மாவிளக்கு ஊர்வலமும், இரவு வாண வேடிக்கையும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT