செய்திகள்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மீண்டும் சிறப்பு ஆசீர்வாத சேவை தொடக்கம்

DIN

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆசீர்வாத சேவையை கோயில் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. 
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இம்மாதம் 8-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை லட்சம் வில்வார்ச்சனை மற்றும் குங்குமார்ச்சனை சேவை நடக்க உள்ளது. தினசரி காலை 6, 7, 10 மற்றும் மாலை 4 மணி என நான்கு முறை கோயில் வளாகத்தில் உள்ள சிவன், அம்மன் அலங்கார மண்டபத்தில் இச்சேவைகள் நடக்க உள்ளன. இதில், ரூ. 200 செலுத்தி இருவர் பங்கு கொள்ளலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும். 
மேலும் பக்தர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசீர்வாத சேவையையும் கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் ரூ. 500 செலுத்தி பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கை, 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT