செய்திகள்

திருமலை- திருப்பதி செய்திகள்

தினமணி

75,800 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 75,800 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 39,185 பேர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, பக்தர்கள் வைகுண்டம் ஒன்று மற்றும் இரண்டையும் சேர்த்து 34 காத்திருப்பு அறைகளில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது.
திவ்ய தரிசன பக்தர்களும், ரூ. 300 விரைவு தரிசன பக்தர்களும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்றால் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் நடைபாதை பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உண்டியல் காணிக்கை ரூ. 2.62 கோடி
திருப்பதி, நவ. 12: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.62 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 2.62 கோடி வசூலானது. 
ரூ. 17 லட்சம் நன்கொடை 
திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடையை அளித்து வருகின்றனர். 
அதன்படி, சனிக்கிழமை ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், உயிர்காக்கும் அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 17 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT