செய்திகள்

காரைக்கால் காவிரி புஷ்கரம் விழா: 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் தீர்த்தவாரி

தினமணி

காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு அரசலாற்றில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 5}ஆம் நாளான சனிக்கிழமை 23 ஆண்டுகளுக்குப் பின்னர் விழுதியூர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
அகலங்கண்ணு பகுதி அரசலாற்றில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு, செப். 12}ஆம் தேதி முதல் காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. 12 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் 5}ஆம் நாளான சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து பக்தர்கள் புனித நீராடினர்.
இந்நாளின் சிறப்பு நிகழ்வாக, விழுதியூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அகலங்கண்ணு தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, சுவாமியுடன் வந்த பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராடினர். தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT