செய்திகள்

திருமலை திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர வசந்தோற்சவம்

தினமணி

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கோடைகாலம் தொடங்கும் போது கோடை வெப்பத்தைத் தவிர்க்கும் நோக்கில் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 28ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை திருச்சானூரில் வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான சுவரொட்டியை தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் வெளியிட்டார். வசந்தோற்சவத்தை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 
அதனால் அன்றைய தினம் 5 மணிநேரம் தாயார் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 27ஆம் தேதி மாலை அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. வசந்தோற்சவம் நடைபெறும் 3 தினங்களிலும் ஊஞ்சல் சேவை, லட்சுமிபூஜை, கல்யாணோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 
வசந்தோற்சவத்தை முன்னிட்டு 3 நாட்களும் இரவு வேளையில் பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வர உள்ளார். 
மேலும் 29ஆம் தேதி காலை தங்கரத புறப்பாடு நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.150 (ஒருவருக்கு) செலுத்தி பங்கேற்கலாம். அவர்களுக்கு ஒரு லட்டும், ஒரு வடையும் பிரசாதமாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT