செய்திகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம், சேனை முதல்வர் புறப்பாட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது. 
தொண்டை நாட்டு திருப்பதிகள் 22-இல் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்தவம் சித்திரை பெருந்திருவிழாவாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 19)தொடங்கியது. இவ்விழாவில் மே 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதை முன்னிட்டு, முதல் நாளான வியாழக்கிழமை சேனை முதல்வர் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ரிஷப லக்கினத்தில் பக்தோசித பெருமாள் திருமலைக்கு எழுந்தருளுதல் உற்சவம் நடைபெற உள்ளது. 
வியாழக்கிழமை நடைபெற்ற சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியில் சேனை முதல்வர், 4 மாட வீதிகளில் அழைத்து செல்லப்பட்டு கோயிலுக்கு திரும்பிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் நகர முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT