செய்திகள்

மார்கழி பிறப்பையொட்டி நாளை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மார்கழி பூஜைக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோயில் நாளை நடை திறக்கப்பட்டு..

DIN

மார்கழி பூஜைக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோயில் நாளை நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட முக்கியமான தினங்களில் 5 நாட்கள் மட்டும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் நாளை மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தாண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், சதுரகிரி மலையில் மாலை 4 மணிக்கு மேல் மலை ஏறக்கூடாது என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT