செய்திகள்

கபிலேஸ்வரர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் வேதமந்திரங்கள் முழங்க ரிஷபக் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தொடங்குகிறது. 
திருப்பதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபில தீர்த்தக்கரையில் கபிலேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
பிரம்மோற்சவம் சிறப்பாக எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெற திங்கள்கிழமை மாலை அங்குரார்பணம் என்னும் முளைப்பாரி விடும் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது. புற்றுமண்ணை எடுத்து வந்து அதில் 9 வகையான தானியங்களை பாலிகைகளில் அர்ச்சகர்கள் முளைவிட்டனர். முன்னதாக மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை மூஷிக வாகனத்தில் உற்சவர் விநாயகர் மாடவீதியில் வலம் வந்தார். 
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கும்ப லக்கினத்தில் ரிஷபக் கொடியேற்றம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT