செய்திகள்

திருத்தணியில் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவானது மார்ச் 2 வரை நடைபெறுகிறது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. 

பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக தினமும் ஒரு வாகனத்தில் இரு வேளைகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வகையில், இந்த வருடத்திற்கான பிரம்மோற்சவ விழா இன்று இரவு தொடங்குகிறது. 

நாளை காலை 6 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.,27-ம் தேதி வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. மாசி மாத பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT