செய்திகள்

பொங்கல் திருவிழா தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 800 கிலோ காய்கனிகளால் அலங்காரம்: 108 கோ பூஜை

DIN

பொங்கல் திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்தியெம் பெருமானுக்கு திங்கள்கிழமை சுமார் 800 கிலோ எடையுள்ள காய்கனிகள், மலர்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 கோ பூஜை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, மகா நந்தியெம் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காலை மகா நந்தியெம் பெருமானுக்கு உருளைகிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், செள செள, முள்ளங்கி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி போன்ற பழ வகைகளாலும், அதிரசம், ஜிலேபி, ஜாங்கிரி, பால்கோவா போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செம்பருத்தி போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 800 கிலோ. பின்னர், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மேலும், மகா நந்தியெம் பெருமான் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசுக்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலை, பட்டுத் துணி அணிவிக்கப்பட்டன. இதையடுத்து, பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT