ஏழுமலையானுக்கு இரு சக்கர வாகனம் நன்கொடை
ஏழுமலையானுக்கு இரு சக்கர வாகனம் ஒன்று திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM
ஏழுமலையானுக்கு இரு சக்கர வாகனம் ஒன்று திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கூடுரைச் சேர்ந்த சுரேஷ் ரெட்டி என்ற பக்தர் அந்த நகரில், ஸ்ரீசாய் கீர்த்தி என்ற இருசக்கர வாகனம் விற்கும் கடையை நடத்தி வருகிறார். திருமலைக்கு வந்த அவர் திங்கள்
கிழமை காலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அதன்பின் அவர் ஏழுமலையான் கோயில் வாசலில் இருசக்கர வாகனம் ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார். அந்த வாகனத்திற்கு முறையாக பூஜை செய்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். அதன் மதிப்பு ரூ.73 ஆயிரம் என்று சுரேஷ் ரெட்டி தெரிவித்தார்.