செய்திகள்

சிவலிங்கத்தின் மீது நாகப் பாம்பு சட்டையை உரித்து விளையாடிய அதிசயம்!

தினமணி

கூத்தாநல்லூர் வட்டம், வாக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் மீது நாகப் பாம்பு சட்டையை உரித்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வாக்கோட்டையில் எழுந்தருளியுள்ள வாலாம்பிகை சமேத வாலிபுரீசுவரர் கோயிலின் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் கோயிலின் மூலவர் சன்னிதானத்தை திறந்துள்ளார். அப்போது, மூலவர் வாலிபுரீசுவரர் மீது நாகப் பாம்பு தனது சட்டையை உரித்து, மாலையாகப் போட்டுள்ளதைப் பார்த்த குருக்கள் வியப்படைந்தார். 

இதையறிந்த அப்பகுதி மக்கள், கோயிலில் கூடினர். நாகப் பாம்பு மூலவர் வாலிபுரீசுவரர் மீது அதன் சட்டையை உரித்து மாலையைப் போல் போட்டுச் சென்றதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இதையடுத்து, வாலிபுரீசுவரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இத்தகவலையறிந்த சுற்றுவட்டார மக்கள், வாலிபுரீசுவரர் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT