செய்திகள்

மழையை முன்கூட்டியை கணிக்கும் அதிசய கோயில்! 

நாட்டில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவதொரு அதிசயங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

தினமணி

நாட்டில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவதொரு அதிசயங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த அதிசயங்களைப் படிக்கும்போதும், கேட்கும் போதும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கச் செய்கிறது.

அந்தவகையில் இன்று நாம் காணப்போகும் அதிசய கோயில்களின் பட்டியலில் ஒன்று தான் உத்திரப் பிரதேசம், பிதார்காவன் பெஹத்தாவில் அமைந்துள்ள ஜெகன்நாதர் கோயில். இந்த அதிசய கோயிலில் மழைத் துளிகளை வைத்து அந்த ஆண்டு மழையின் அளவு எப்படி இருக்கும் என்று முன்னரே வானிலை கணிக்கப்படுகின்றதாம். 

இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். கோயின் மேற்கூரையில் நீர்த்துளிகள் தோன்றி, மேற்கூரை ஈரப்பதமாக இருந்தால் அந்த ஆண்டு சுமாரான மழையும், நீர்திவலைகள் இருந்தால் அந்தாண்டு நல்ல மழை பெய்யும் என்றும் கணிக்கப்படுகிறது. 

அதேசமயம் நீர்த்திவலைகள் தோன்றி அது சொட்டிக்கொண்டிருந்தால் அந்தாண்டு கனமழை பெய்யும் என்றும், அதேபோல் ஈரப்பதம் எதுமின்றி காணப்பட்டால் அந்தாண்டு வறட்சி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இக்கோயில் குறித்து தலைமை பூசாரி சுக்லா கூறுகையில், 

கோயிலின் இந்த கணிப்பு இதுவரை பொய்யானதே இல்லை. கோயிலின் மேற்கூரை சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால் மழைக்காலங்களில் இடி, மின்னல்களால் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்பட்டதில்லை. எத்தனையோ ஆராய்ச்சியாளர் குழுக்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆராந்தும் மேற்கூரையின் மேல் ஏன் இந்த நீர்திவலைகள் ஏற்படுகின்றது என அறியமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

இப்படிப்பட்ட அதிசய திருத்தலத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் நாம் தரிசிக்க வேண்டும் அல்லவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT