செய்திகள்

மகாசம்ப்ரோக்ஷணத்தின்போது பக்தர்களை அனுமதிக்க வேண்டும்

DIN

ஏழுமலையான் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெறும்போது பக்தர்களை அனுமதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று நகரி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தெரிவித்தார்.
அவர் ஏழுமலையானை திங்கள்கிழமை காலையில் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் தீர்த்தப் பிரசாதங்களை அளித்தனர். அதன் பின், அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியது: ஏழுமலையான் கோயில் அடுத்த மாதம் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெறும்போது 9 நாள்களுக்கு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 
கோயிலில் சுரங்கம் தோண்டி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆபரணங்களை எடுக்கவே தேவஸ்தானம் இவ்வாறு முடிவு செய்துள்ளதா? மகாசம்ப்ரோக்ஷணத்தைக் காண வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 
அவர்களை மகாசம்ப்ரோக்ஷணம் காண அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் கண்டிப்பாகப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT