செய்திகள்

சதயம், பூரட்டாதி நட்சத்திரத்துக்கு மட்டும்! இன்று என்ன செய்யலாம்? என்ன தவிர்க்கலாம்?

சதயம், பூரட்டாதியும் கும்ப ராசியில் வரும் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இன்று முழுவதும்..

தினமணி

சதயம், பூரட்டாதியும் கும்ப ராசியில் வரும் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. சந்திராஷ்டமம் என்றதும், பயந்து நடுங்கத் தேவையில்லை. 

குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம்.  சந்திரன் என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது எட்டாமிடத்தையும் குறிக்கும்.

சந்திரனை "மனோகரன்' என்றும் போக்குவரத்துக்குக் காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடையக் கிரகம். சந்திராஷ்டம நாளில் என்ன செய்யலாம்? என்னென்ன தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 

சந்திராஷ்ட தினத்தில் தவிர்க்க வேண்டியவை..

• இன்றைய நாளில் செய்யும் பணிகள் அனைத்தும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். 

• சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடைய கிரகம். அந்த மனோகரன் 8-இல் மறையும்போது மன உளைச்சல், கோபம், ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற எதிர்மறையான குணங்களைத் தருவார். 

• இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

• புதிய பணிகள், புதிய பயிற்சிகள், சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

சந்திராஷ்ட தினத்தில் செய்ய வேண்டியவை..

• சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ள காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு மூன்று முறை வலம் வந்துவிட்ட பின்பு அன்றாடம் பணிகளை செய்ய துவங்கலாம்க. 

• சந்திராஷ்டம நாளில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது அவசியம். 

•  நிலவைத் தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும். 

• சந்திராஷ்ட தினத்தில் அன்றாடம் செய்யும் பணியை தொடர்ந்து செய்யலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT