செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு நாளை இலவச தரிசனம்

தினமணி

திருமலையில் மூத்த குடிமக்களுக்கு செவ்வாய்க்கிழமையும், (24-ஆம் தேதி), கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு புதன்கிழமையும் (25-ஆம் தேதி) இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
 தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி வரும் 24-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
 அதேபோல், வரும் 25ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. இத்தரிசனத்தை முடிப்பவர்கள் 90 நாள்களுக்குப் பின்பே மீண்டும் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
 தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT