செய்திகள்

புதனும் அஷ்டமியும் சேர்ந்து வரும் புதாஷ்டமி இன்று! என்ன செய்யலாம்? 

DIN

சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் இரண்டிற்கும் எட்டாவது நாள் அஷ்டமி திதி இருந்து அது எந்த மாதமாக இருப்பினும் அது சிறப்பு வாய்ந்த நாள் எனப்படும். உதாரணத்திற்கு அந்த நாள் புதன்கிழமை என்று எடுத்துக்கொண்டால், புதாஷ்டமி என்று பெயர். 

காலத்தால் பிரளயத்தால் அழிவுறா ஆய கலைகளைப் பெற வேண்டி ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ காலபைரவரை வணங்கி ஸ்ரீ ஹயக்ரீவரிடம் குருகுலவாசம் பூண்ட புதனும் அஷ்டமியும் கூடும் புதாஷ்டமி இன்று. இந்நாளில் வித்யா பைரவ சக்திகள் நிறைந்த தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதால் தினசரி வாழ்வில் ஏற்படுகின்ற பலவிதமான பயங்கள், அச்சங்கள் தெளிவதுடன், எதிர்காலத்தில் வன்முறைகள், தீவினை சக்திகளிலிருந்து நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் மனித சமுதாயத்தை காத்து ரட்சித்துக் கொள்வதற்கான அதியற்புத மகா வித்யா பைரவ சக்திகள் கிட்டும். 

பெண்கள் புதாஷ்டமியில் ஸ்ரீ கால பைரவரை வணங்கி புனிதமான நல்வரங்களைப் பெற வேண்டிய உத்தமமான பைரவ பூஜை நாள் இன்று. 

வித்யாப பைரவ சக்தித் தலங்களில் சில..

• கோவை வெள்ளலூர் அருகே சிவபுரி ஸ்ரீ இடிகபாலந் தாங்கி சரகபால மாலை பைரவர் 

• சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ தளிநாதர் ஆலயம் இதனருகில் உள்ள வைரவன்பட்டி போன்ற வைரவ பூமித் தலங்கள் 

பரிகாரம்

• ஸ்ரீ கால பைரவருக்கு புனுகு, கஸ்தூரி கலந்த சந்தனக் காப்பு இட்டு முந்திரி மாலை சார்த்தி, சிவராத்தி போல ஆறு அல்லது எட்டு கால வழிபாடுகளை நிகழ்த்திட வேண்டும். 

• இன்று பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு, ஒரு அகலில் நல்லெண்ணெய், இன்னொரு அகலில் இலுப்பை எண்ணெய், மற்றொன்றில் விளக்கெண்ணெய், பசு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

• ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது. இவ்வாறு ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். 

• சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்மமி தினமேயாகும். 

• புதனும் அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருதல் விசேஷமானது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT