செய்திகள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: இன்று தேவபிரஸ்னம் 

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நேற்று கோயில் நடை திறக்கப்பட்டு, இன்று காலை தேவபிரஸ்னம் தொடங்கியது. 

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்து நெய்
அபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7.00 மணிக்கு படி பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. 

பங்குனி உத்திர திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதால் சுவாமி விக்ரகத்துடன் பூசாரி கீழே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தேவபிரஸ்னம் நடத்த
தேவசம்போர்டு முடிவு செய்தது. 

அதன்படி இன்று காலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ராசிபூஜை நடத்தி தேவபிரஸ்னம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பரமேஸ்வர சர்மா தேவபிரஸ்ன
பலன்களைச் சொல்லி வருகிறார். அடுத்த 3 நாட்கள் வரை தேவபிரஸ்னம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT