செய்திகள்

திருமலை: உண்டியல் காணிக்கை ரூ.3.54 கோடி

DIN



 திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.54 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். 
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ3.54 கோடி வசூலானது. 
ரூ.17 லட்சம் நன்கொடை 
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். 
அதன்படி திங்கட்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ17 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

பக்தர்கள் குறைகளைத் தெரிவிக்க...
 திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற இலவசத் தொலைபேசி எண் மற்றும் 93993 99399 என்ற தனது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
மேலும், பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊழியர்கள் உரையாற்றுவர்.
சிறிய பிரச்னைகளை ஊழியர்களும், பெரிய பிரச்னைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். 
அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT