செய்திகள்

திருமலையில்  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

தினமணி

திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. 
இதற்காக காலையில் நடைபெற்ற சேவைகள் அனைத்தும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட்டன.
பின்னர், காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை ஏழுமலையான் கோயில் வெளிவாசல் முதல் கருவறை வரை பரிமள சுகந்த திரவியத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். கோயில் முழுவதும் சுத்தம் செய்தபின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT